பாரா ஒலிம்பிக் போட்டிகள் என்பன ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற
பின்னர் அதை தொடர்ந்து நடைபெறும் மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக்
போட்டிகளாகும்.சில வரைமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நட்த்தப்படுகின்றன. ஐபிசி
என்று வழங்கப்படும் சர்வதேச பாரா ஒலிம்பிக் குழுமம் உடல் குறைபாட்டு அளவை T
என்று F பிரிக்கின்றனர் T என்பது TRACK EVENTS அதாவது ஒட்டப்பந்தையம் சார்பான
விளையாட்டுக்கள் F என்பது FIELD EVENTS மைதான
விளையாட்டுக்கள் T1,T12 T32 ,T44 ,F12 ,F22 ,F31, F44 இதில்
காணப்படும் எண்கள் அவர்களின் உடல் தகுதி அளவீடுகளாகும். அவர்களின் உடலில்
இருக்கும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு வீரர்கள் பிரிக்கப்படுகின்றனர்
லண்டன் 2012ல் பாரா ஓலிம்பிக்கில் T44
பிரிவில் நடைபெற்ற சர்ச்சைகுரிய சம்பவங்களில் ஒன்று தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கர்
பிஸ்டோரியஸ் என்னும் பிளேடு ரன்னர் என்பவர் வைத்ததுதான்.
முதலில் இவரை பற்றியும் பார்ப்போம் இவருக்கென தனி வரலாறு
உள்ளது.2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தன் முதல் தங்க பதக்கத்தை
பெற்றார்.
இவரின் ஓட்ட திறமையை எழுத்தில் காண்பதை விட கிழேயுள்ள காணொளியில்
காணலாம் ஒரு பந்தைய குதிரையை எவ்வளவு எளிதாக வெல்கிறார் என்பதை!!
2007ஆம் ஆண்டு இவருக்கு எதிராக செயற்கை கால்களை விதிகளுக்கு மீறி தான்
வெற்றி பெறும் வண்ணம் தயாரிக்கிறார் என்ற புகார் எழுந்த்து இதனால் சர்வதேச தடகள
சம்மேளனம் இவரை போட்டிகளில் பங்கேற்க தடை செய்தது.இதனால் 2008 ஒலிம்பிக்கில்
இவர் கலந்து கொள்ளவில்லை.
தளாராத பிஸ்டோரியஸ் 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை தயார்
செய்தார் அதில் தன் பிரிவு T44ல் பலத்த போட்டி
இருக்கும் என கனவிலும் நம்பியிருக்கமாட்டார்
இப்போது அவரது பிரிவின் சக போட்டியாளரான ஆலன் ஆலிவேராவை பற்றி
பார்ப்போம்!!. பிரேசிலில் பிறந்த இவர் பிறந்த 21ம் நாளிலே தன் இரண்டு கால்களையும்
இழந்தவர். ஏழ்மை நிலையிலேயே பயிற்சியை தொடர்ந்த இவர் தன் 13ம் வயதிலேயே பிரேசில்
அணிக்காக போட்டிகளில் கலந்து கொண்டார்.2008ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்
வெள்ளி பதக்கம் பெற்றிருந்தார்.
இந்த இருவரும் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில நடை பெற்ற உலக தடகள
போட்டிகளில் கலந்து கொண்டாலும் சரியான இணக்கம் காணப்பட வில்லை.
2012 லண்டன் பாரா ஒலிம்பிக்கின் போது T44பிரிவின்
200மீட்டர் இறுதி போட்டியில் இருவரும் மீண்டும் மோதிக்கொள்ளும் நிலை வந்தது. இதில
26 வயதான பிஸ்டோரியஸ் மிகவும் அனுபவும் திறமையும் மிக்கவர் இறுதி சுற்றுக்கு
தகுதிபெறும் முன் சுற்றில் இவர் 21.30வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்து
இருந்தார்.பிஸ்டோரியஸ் ரசிகர்களால் கால்களில்லாத உலகத்தின் வேக மனிதன் என்றும்
பிளேடு ரன்னர் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். 19வயது ஆலனுக்கு அது கடுமையான போட்டிதான் பக்கத்தில்
இருப்பவர் உலக சாதனைக்கு வேறு சொந்தக்காரர் போட்டிக்கான களத்தில் வீரர்கள்
இறங்கினர்.விசில அடிக்கப்பட்டது சில வினாடிகளில் பிஸ்டோரியஸ்சை பின்னுக்கு
தள்ளினார் ஆலன் 21.45 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்தார். பிஸ்டோரியஸ் 21.53 வினாடிகளில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.
விரக்தியின் விளிம்புக்கு போன பிஸ்டோரியஸ் ஆலிவர் மீதும் அவர் பயன்
படுத்திய பிளேடின் மீதும் குறை கூறினார்.அது விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ளது
சற்று உயரமாக உள்ளதால் காலின் வேக அளவும் எடுத்து வைக்கும் தூரமும் என்னை
தோற்கடித்துவிட்டது என்று குறை கூறினார்.(பின்னர் தன் புகாரினை மன்னிப்புடன்
திரும்ப பெற்றார்)அவர் காரணங்களை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த ஆலனின் தாயார் கிளாடியா அவன் முதன்
முறையாக செயற்கை காலை அணிந்த போது மிகவும் சிரமப்பட்டான் மிகவும் சிரமத்திற்கிடையே
சொந்த செலவில் ஓட்டபந்தைய பிளேடுகளை வாங்கினோம் பின்னர் சுகாதார துறையின் முலமாக
வேறு காலணிகள் வழங்கப்பட்ட போதும் அதை பழக மிகவும் சிரமப்பட்டான்.அதை
வார்த்தைகளால் சொல்லலாகாது. ஒவ்வொரு முறையும் அவன் என்னிடம் அம்மா பழைய வலிகளை
மறப்போம் புதிய வழிகளை செயல் படுத்துவோம் என் ஆறுதல் கூறுவான்.எட்டு வயது முதல்
அவன் எடுத்துக்கொண்ட பயிற்சியின் பலனை அவன் இன்று அடைந்துள்ளான். இந்த வெற்றி அவன்
எதிர்பார்க்காத ஒன்றாகும் எனெனில் சிறந்த வீரர் ஆஸ்கரை வெற்றி கொள்வது ஒன்றும்
எளிதானது இல்லை. என்னால் இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறினார்.
T44 பிரிவின் 400 மீட்டர் பிரிவில் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் வெற்றி பெற்று
தங்க பதக்கம் பெற்றார்.
எனினும் 200மீட்டர் பிரிவில் தான் தோல்வியுற்றதை அவரால்
ஏற்க முடியாத காரணத்தினால் பொய் புகார்களை வளரும் வீரர் மேல் சொன்னார்.பின்பு
உண்மை நிலையை உணர்ந்த அவர் ஆலனிடமும் சர்வதேச தடகள சம்மேளத்திடமும் மன்னிப்பு
கேட்டார்.
விளையாட்டின் இறுதி நிலை என்பது விட்டுக்கொடுத்தல் மற்றும் சகிப்பு
தன்மையாகும்.உடனடியாக பிஸ்டோரியஸ் மன்னிப்பு கேட்டது அந்த வளரும் விளையாட்டு வீரரான ஆலனின் மதிப்பை கெடுக்காமல் தன் மதிப்பை விளையாட்டு உலகத்தினர் மற்றும் ரசிகர்களிடையே
மங்காமல் செய்து விட்டார்.
பிளேடு ரன்னர்ஸ் .... பாதி இயந்திம்னு சொல்லத்தக்க மனிதர்கள். எதிர்பார்த்ததை விட நிறைய செய்திகள் தந்துள்ளீர்கள்.
ReplyDeleteநான் கூட ஆஸ்கார் எப்படியும் இந்த முறை ஜெயிப்பார் என எதிர்பார்த்தேன் ஆனா பிரேசில் வீரர் வெற்றி பெற்றதும் விரும்பத்தக்க நிகழ்வே...
சந்தடி சாக்கில் உயரம் தாண்டுதலில் நம்ம கர்னாடக சகோதரர் நாகேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றதையும் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் தலைப்பு பிளேடு ரன்னர் பத்தி ..! சரி அடுத்த பதிவுல பாத்துக்கலாம்.
அப்புறம் இன்னொன்னு... அந்த அரேப் ரேஸ் குதிரையுடனான போட்டி....! நானே பார்த்திராத ஒன்று.
தொடரட்டும்.....உங்கள் விளைட்டார்வம்...!!
அதானாலென்ன நம்ம இந்தியர்களுக்காக ஸ்பெஷலா ஒரு பதிவை போட்டா போச்சு!! உங்களால நிறைய படிச்சேன் பாசு!மிகவும் நன்றி!!!
DeleteHai! Rajesh u made a good attempt as 'vilaiyattu pulla'.Really interesting and appreciable efforts.Gained lot about sports.Related videos superb.I like that line "palaiya valigalai marappom,puthiya vazhigalai seyal paduthuvom" very inspiring.Good efforts.Keep it up.
ReplyDeleteமிகவும் நன்றி டீச்சர் உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகின்றது.
ReplyDeleteTrend Setter............
ReplyDelete.............................
.....................................
எழுத்துக்க்ளுடன் வீடியோ வும் போட்டு அசறதுலா நீன்கள் கில்லாடி. Blog படிக்கும் போது எண் மணசுக்கு பளீரென்று தோன்றியது என்ன்வெந்றால், Blog எழுவதில் நீன்கல் பண்ணற முயர்ச்சி ஒரு புது Trend Setting. உணமை சம்பவங்கல் எழுதுவது சிரமம் ஆண விசயம் என்று எணக்கு அரியும். நிறய புத்தகந்கலை refer பண்ணனும்னு தெறியும். இதுல வீடியோக்களும் அலச வேண்டியதா இருந்திருக்கு.
இதற்காக எத்தனை புத்தகங்கலை Refer செய்தீற்கள்? எவ்வளவு நேரம் கணிணி உதவி அனுகிணீற்கல்??????????
அத்தனையும் பத்தே நிமிடந்கலில் சுவாரஸ்யமாக கொடுத்ததில் அருமை.
அண்புடன்,
க. சுரேஸ்.
நன்றி தல வார்த்தைகளில் சொல்ல முடியாத நன்றிகள்! இன்னும் நல்லா பண்ணுவோம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks to ur Website i got to know thinks which i did't know previously ,
ReplyDeleteமிகவும் (காலத்தினால் செய்த) நன்றி
DeleteOhhh.. I am very sad to read the news today that Oscar Pistorius shot a girl at his home. He was arrested by the Police. #ஏண்டா..........ஏண்...
ReplyDeleteHere is the link:::
ReplyDeletehttp://www.thehindu.com/sport/athletics/pistorius-arrested-for-killing-woman/article4414497.ece?homepage=true