கொஞ்ச நாளா பசங்க வெள்ளி,சனி ஆனா நைட்டு கிளம்பிடுறானுங்க எங்க
போறானுங்கன்னு தெரியல!
இன்னடா விசயம்னு கேட்டா
உன்ன மறந்துட்டேன்னு சொல்றானுங்க?!!
டேய் இவ்ளோ நாளா பழகிட்டு இப்படி பண்றீங்களே(இது நான்)
சரி இந்த வாரம் போலாம்டா மச்சி
தேங்க்ஸ் மச்சி!! (இது நான்)
அடுத்த சனி இரவும் வந்தது
மச்சி நைட்டு ரெடியாயிடு,
சரிடா!!
சரி இவனுங்க எங்கதான் போரங்கதான்னு பார்ப்போமேன்னு புதுசா எடுத்த ஜீன்ஸ்,டிஷர்ட் போட்டு ரெடியானேன்.
.
ரெடி மச்சி கிளம்பலாமா?
இருடா மத்த முணு வரட்டும்.அனைவரும் வந்தனர். இருட்ட ஆரம்பித்தது ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டு பீச் பக்கம் இருக்குர பாஸ்ட் புட் சென்டர் (துரித உணவகம்) நோக்கி போனாங்க நானும் கூட............
என்ன மச்சி யாருக்காவது பிறந்த நாளா? டிரீட்லாம் தரீங்க?
இல்ல மச்சி சும்மாதான் இன்னா வேணுமோ வாங்கிக்க எல்லாமே நம்ம செலவுதான்..
சாயந்திரம் வேலையடுனதுல பயங்கர பசி மச்சி எனக்கு ஒரு சிக்கன் நூடுல்ஸ்
ஒரு 65 போதும்
எல்லோரும் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்தனர்
சும்மா சொல்லக்கூடாது வாசனைக்கு எத்த மாதிரி ருசியும் அருமையா இருந்தது.
நல்ல சாப்பாடு மச்சி.
அருமையா இருந்தது தேங்க்ஸ் டா.
பரவால்ல நமக்குள்ள தேங்க்ஸ் எதுக்குடா
ஐந்து பேரில் ஒவ்ஒருவராக கிளம்பினர் என்ன மச்சி கிளம்புரானுங்க?
போகட்டும் டா பணம் தரபோறது நான் தானே!!
கடைசியா இருந்தது நானும் அவனும் மட்டும் தான்.
திடிரென அவன்
மச்சி நீ நல்லா ஓடுவல்ல?
இன்னா மச்சி ஒரு புட் பால் ப்ளேயர பார்த்து இப்படி கேட்குற ஆனா இப்ப கொஞ்சம் கஷ்டம் நிறைய சாப்டேன்.
ஆனா ஓடித்தான் ஆகணும்
ஏன்டா?
நம்ம கிட்டதான் காசு இல்லையே!!
என்னடா சொல்ற காசு இல்லையா??
பிடிங்கடா அவனுங்களை என்று குரல் மட்டும் தான் கேட்டது எங்க பார்த்தோம் எடுத்த ஓட்டம் வீடு வரும் வரை திரும்பி கூட பார்க்கல
அப்பாடா வீடு வந்தாச்சு,
சாப்பாடு ஜீரணம் ஆகி அம்மா கிட்ட நல்லா திட்டு வாங்கிட்டு மிண்டும் சாப்பிட்டு படுத்தேன்.
அப்பா இனிமே இவனுங்க சவகாசமே வேன்னம்னு ஒதுங்கியே இருந்தேன்
என்ன மச்சி ஆளையே காணோம்?
நைட் ரெடி ஆயிடு மார்க்கெட்ல ஒரு பாஸ்ட் புட்
கடை ஓபன் பண்ணியிருக்காங்கலாம்?
யப்பா!! ஆள விடுங்கடான்னு ஓடி வந்தேன்.
( இது நான் ஒன்பதாவது படிக்கும் போது நடந்தது)
No comments:
Post a Comment