
ஒருநாள் காலை நண்பனை பார்த்து வர பூந்தமல்லி செல்ல வேண்டி இருந்தது காலையிலே சென்று வரலாம் என்று KMC சென்று அங்கிருந்து போகலாம் என்று மயிலாப்பூரிலிருந்து KMCல் நின்றேன்.பிராட்வே டு பூந்தமல்லி பேருந்து வந்தது. பேருந்தில் ஏறியதும் ஒரே புளிப்பு வாடை நேற்று செய்த சாம்பார் கெட்டு போனால் அடிக்குமே அதே வாடை.என்னவென்று பார்த்தால் கட்டிட வலை செய்யும் வட நாட்டவர் ஏறதாழ பேருந்து முழுவதும்.பெண்கள் முக்கை மூடிக்கொண்டும் ஆண்கள் திட்டி கொண்டும் பயணம் செய்தனர்.காலை பேருந்தில் மல்லியின்மணமோடு அழுக்கு மணமும் சேர்ந்து கலந்து புது வித குமட்டலை வழங்கியது. இறங்க மனது வராமல் தொடர்ந்து பயணமானேன்.
பக்கத்தில் நிற்பவர் தொடர்ந்து அவர்களை திட்டி கொண்டே வந்தார்.இவனுங்க ஊர்ல வேலையே கிடையாதா இங்க வந்து சாவடிக்குரனுங்க? (இப்பதிவு எழுதும் போது ஆவி யில் படித்தேன் அம்பத்தூர் தொழில் பேட்டையில் வேலை செய்பவர்களில் அதிகம் பேர் வடநாட்டவர் தான்.)வருடம் முழுவதும் வேலை,நிறைய வருமானம் தங்கும் இடம் இலவசம் போன்றவை இவர்களை சென்னை பக்கம் இழுக்கின்றது.
ஒரு பையனிடம் தம்பி வேலை முடிஞ்சதும் குளிக்கமாட்டியா? என்றேன். " மெட்ராஸ் தண்ணி நம்லுக்கு ஒத்துக்கலேனு முஞ்சில காரிய துப்பிட்டான்.எனக்கு போன் வந்தது பேசி முடித்தப்பிறகு
அவன் என்னிடம், பாய் இந்த போன் இன்னா ரேட்டுன்னு கேட்டான்.நான் 6000 ருபாய் என்றேன்.
என் தங்கைக்கு வாங்கணும் அவ இப்போ +2 போறான்னு சொன்னான்.அவன் தொடர்ச்சியாக என்னையும் போனையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.அவன் கண்களில் எதோ இனம் புரியாத
ஒரு சந்தோசம்.அது மகிழ்ச்சியா இல்ல சூழ்ச்சியான்னு தெரியல? பேருந்தில் மேலும் மேலும் கூட்டம் சேரவே நிற்க முடியாத நிலை.அவன் தொடர்ந்து என் கைபேசியை பார்த்துக்கொண்டே வந்தான் நன் பேன்ட் பாக்கெட்டில் வைக்காமல் கையிலே வைத்துக்கொண்டேன்.உண்மையா சொல்லணும்னா கொஞ்சம் பயமாத்தான் இருந்தது எங்கே போனை எடுத்துக்கொள்வனோ என்று.
முன் படிக்கட்டில் இருந்தவன் உரத்த குரலில் அரே பஸ் ஸ்டாப் ஆகையா என்றான்.கரையன்சாவடி நிறுத்தம்.அனைவரும் இறங்க ஆரம்பித்தனர் என் அருகே வந்தவன் சார் உங்க பர்ஸ் வெளியே வந்து கிழே விழுவது போல இருக்கு பத்திரம் என்றான். செருப்பால் அடித்தது போல இருந்தது.
அப்பா! பஸ்ல இருந்த நாத்தம் போய் விட்டது என்றார் ஒருவர்.
ஆம் நாத்தம் போய் விட்டது என்றேன் நானும்.
"காலை பேருந்தில் மல்லியின்மணமோடு அழுக்கு மணமும் சேர்ந்து கலந்து புது வித குமட்டலை வழங்கியது" ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா ...
ReplyDeleteதல உங்க வீட்டு பக்கம் கருவாட்டு மண்டி இருக்கு அதனால நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல
ReplyDeleteவட நாட்டவர்கள் மாநிலத்தை விட்டு வந்து கொத்தடிமைகளைப் போல உழைக்கிறார்கள்...அவர்களுக்கு போதுமான ஊதியத்தை கூட தருவதில்லை. பணி இடங்களிலேயே சுகாதாரமற்ற உணவு தகர கொட்டகை உறைவிடம் நாறிபோன குடிநீர்!!! யாருக்காக அவர்கள் உழைக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்!!!
ReplyDeleteHow to Make Money at the Casinos - Worktomakemoney.com
ReplyDeleteIt's important to find งานออนไลน์ a trusted online septcasino gambling site, that has the same youtube downloader software and platform You will earn points by playing casino games, for example.