
ஒருமுறை ஷூட்டிங்கின் மதிய இடைவேளையில் M.Rராதாவுக்கு வீட்டில் சென்று சாப்பாடு
எடுத்து வர வேண்டிஇருந்தது ஆனால் வாகனம் ஏதும் இல்லை.சிவாஜி அப்போதுதான் இம்பாலா
கார் புதிதாக வாங்கியிருந்தார்.ராதா சாப்பாடு எடுத்து வருவதற்காக
சிவாஜியிடம் காரைக்கேட்டார்
'அண்ணே,அது இம்பாலாண்ணே! என்று சொல்லிவிட்டார் சிவாஜி.
அடுத்த முன்றே நாள்களில் புதிய இம்பாலா ஒன்றை வாங்கினார் ராதா. மதிய உணவு
இடைவேளையில் சிவாஜி இருக்கும் நேரம் பார்த்து இம்பாலா அங்கு வந்து
நின்றது. அதில் நிரம்ப
வைக்கோல் கட்டுகட்டாக ஏற்றப்பட்டிருந்தன.
'கணேசா, பார்த்தியா இம்பாலா??
என்ணணே,வைக்கோல் கட்டெல்லாம் ஏத்திகிட்டு? சிவாஜி கேட்டார்.
அது என்ன?வெறும் தகரம் தானே. தோட்டத்துக்கு வைக்கோல் ஏத்திகிட்டு போக எனக்கு வண்டி
கிடைக்கல சரி இம்பலாவுல ஏத்திக்கோப்பான்னு சொன்னேன் .
வைக்கோலை நாம வேற எதுல போட முடியும்?
இம்பாலாலதான் போட முடியும்.
நன்றி -திரு.முகில்,M.Rராதாயணம்.
என் நண்பன் blog எல்லாருக்கும் பயனுள்ளதாக அமையணும்னு வாழ்த்துகிறேன்...
ReplyDeleteசிவாஜி கணேஷன் எதையும் வெளிபடையாக சொல்லகூடிய மனநலம் அடைந்தவர். ராதா அவர்கள் எதையும் தெள்ள தெளிவாக புரிந்துகொண்டு, அடுத்தவர்களுக்கு அவர்களின் வழியிலே மிக தெளிவாக புரியவைக்கிற விதம் அருமை.
ReplyDeleteநீங்கள் இங்கு இதை பகிர்ந்திகிரதிலே மிக்க மகிழ்ச்சி ஆடைகிறோம்.
இங்கு எங்களுக்கு புரிந்தது என்னவென்றால் "ஒரு விஷத்தை, வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக புரிகிறார்கள், எடுதுகொல்கிரர்கள்." இரண்டு பிரபலங்களை வைத்து எங்களுக்கு புரிய வைத்ததற்காக உங்களுக்கு நன்றி நண்பரே.