Monday, August 22, 2011

ஜானி

ஜானினா யாரோ ஹீரோன்னு நினைச்சிடதிங்க!!
எங்க ஏரியா கேப் மாரி,மொள்ள மாரி,முடிச்சவுக்கி எல்லாமே தலைவர் தான்.
ஆள் ஒல்லியான தேகம்,கருப்பு நிறம் ஆன முடி மட்டும் ரஜினி ஸ்டைலு அது சரியாய்
அமையலன்னு தலை முன்னாடி செவிங்கில்லாம் பண்ணிக்குவாறு.அடிதடில தல
கிங்கு ஆன ஆறாவது பசங்களுக்கு மேல தாண்ட மாட்டரு தாண்டினா பிளாஸ்திரி
நிச்சயம் யாருக்கு? நாம தலைக்கு தான்.ஆன வாய் செவிடால்ல ஒரு வடிவேலு சாரி
கவுண்டமணி.

எதாவது வீட்ல வளக்குற ஆட்ட காணோமா? எங்கடா ஜானின்னா ஆளே
இருக்க மாட்டான்.இரண்டு நாள் கழித்து வந்து ஊர்ல ஆயா செத்துட்டங்கன்னு அழுது
காட்டுவான்.

ஒரு முறை வீடு புகுந்து திருடிட்டு நல்லா
சாப்டிட்டு அங்கேயே தூங்கிட்டான்
காலையிலே கையும்,களவுமா மாட்டுனான். என்னடானு கேட்டா? மணி 2 தானே ஆகுது ஒரு
மணி நேரம் தூங்கிட்டு போலாம்னு பார்த்தா காலை ஏழு ஆயிடுச்சின்னு கேசுவலா சொன்னான்.

போலீஸ்ல மாட்டுனா அப்படியே அப்ருவர்தான் இந்த
அடிவாங்கறது எல்லாம்
தலைவருக்கு பிடிக்காது.தண்டனை முடிச்சிட்டு வந்த அன்னைக்கு தலைவர பார்க்கணுமே,
நெத்தியில விபுதி சகிதம் ஊரையே சுத்தி வருவாரு நம்ம அண்ணா ஹசாரே மாதிரி.

ஒரு நாள் எங்க வீடு கேபிள் வயர் அதிகமா
ஆடியது,அம்மா யாருடா அதுன்னு
குரல் கொடுத்தாங்க,பக்கத்துல இருக்குர லைட் கம்பத்துல தலைகிழாக தொங்கி கொண்டிருந்த
ஜானி, யம்மா கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ லைட்ட அவுத்துட்டு ஒயர பழசு போல கட்டிட்டு
போயடுறேன்னு சொன்னான்.அம்மாக்கு ஒரு நிமிஷம் பேச்சே வரல,அந்த அளவு தலைக்கு தில்லு.

ஏரியாவிலுள்ள சிறுவர் பூங்கா, டிரயினேஜ் மூடி, வீடு
கட்டினா அங்கே இருக்கும் கம்பி,
மணல்,செங்கல் அத விடுங்க ஏரியா ஹெட் கான்ஸ்டேபிள் சைக்கிள் உட்பட தலைவர்
கை வைக்காத எடமே கிடையாது.ஓடு பிரித்து திருடுவது நம்ம தலைவருக்கு
பிடித்த விளையாட்டு,மாட்டினா யக்கா! தப்பா எடுத்துக்காத நம்ம ஊடுன்னு
தெரியாது அண்ணாத்தய கேட்டுத்தா சொல்லுக்கான்னு கூலா சாரி கேட்பாரு நம்ம
வாத்தியாரு.!!

இப்போ நம்ம தலையோட நிலைமை என்னன்னு தெரியுமா?? ஒரு
பெட்டி கடை நடத்திக்கொண்டு இருக்கிறார் . ஒரு காலை காணோம் சுகரு வந்து
எடுத்திட்டாங்க, நான்லாம் தண்ணி ஊத்தி ஏரோ பிளேன் ஒட்றவண்டா???!!!!
என்று உதார் விட்டு கொண்டிருந்தான்.

2 comments:

  1. நம்ம வீடுங்கள சுத்தி எவ்வளவு James Bonds இருகிறாங்க. இவுங்கள கொஞ்சம் train பண்ணி (கூடவே கொஞ்சம் Technology யும்) சொல்லி குடுத்த அமெரிக்க வே ஆட்டய போட்டுருவாங்க.

    என்ன திறமை!

    நம்ம Government இவர்களக்கு படிப்பு வசதி பண்ணிகொடுது, சிபிஐ/RAW மாதிரி Investigation Intilligence பணிகளிலே நியமிச்ச நம்ம வூர்ளே Crime ரொம்ப கோரய்நும்னு நினகிரே.

    ReplyDelete
  2. தல பல ஜானி,சுரேஷ்,ராஜேஷ் இருக்காங்க

    ReplyDelete