எல்லா விளையாட்டுகளும் ஏதாவது பழங்கால
விளையாட்டிலிருந்தோ அல்லது மற்ற விளையாட்டுகளை சார்ந்தோ
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஆனால் கூடைபந்து விளையாட்டு இதற்கு விதிவிலக்கு எந்த
விளையாட்டையும் பிரதிபலிக்காமல் தனிப்பட்ட முறையில் ஜேம்ஸ் நைஸ்மித் என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்டது.
நைஸ்மித் 1861-ம் ஆண்டு கனடாவில் அல்மாண்டி
என்னும் ஊரில் பிறந்தார். மெக்கில் பல்கலைகழகத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பட்டம்
பெற்று 1891-ம் ஆண்டு அமெரிக்காவின் YMCAசர்வதேச பயிற்சி பள்ளியில்(இன்று ஸ்பிரிங்ஃபில்டு
கல்லூரி) பணிக்கு சேர்ந்தார். பணியில் சிறப்பாக இருந்தார் நைஸ்மித். புதுவகையான
பயிற்சிகளையும் ஆட்டங்களை உண்டாக்குவதில் தனித்திறமை பெற்று வழங்கினார்.
அமெரிக்காவின் கடும் பனிகாலங்களில் மாணவர்கள்
வெளிப்புற ஆட்டங்களான கால்பந்து,வேகப்பந்து போன்ற ஆட்டங்களை தவிர்த்தனர். இதனால்
மாணவர்களிடையே உடல்தகுதி நிலை குறைந்து அவர்கள் உடல்நிலையில் மாற்றம்
உண்டானது.இந்நிலையை தவிர்க்க எண்ணினார் நைஸ்மித் 2வாரங்கள் விடாமல் யோசனை செய்து
சில விதிமுறைகளோடு உள்ளரங்கு விளையாட்டு ஒன்றை கண்டுபிடித்தார். மேலும்
அவ்விளையாட்டு கால்பந்து விளையாட்டை போல வேகமும்,நுட்பமும் நிறைந்ததாகவும் இருக்க
வேண்டும் என விரும்பினார்.
நைஸ்மித் தனது சிறுவயது விளையாட்டான ”மலைமேல் வாத்து” என்ற விளையாட்டை அடிப்படையாக வைத்து(மலைமேல் ஏறும் வாத்தை
குறிவைத்து கல்லால் தாக்குவது) தனது புது விளையாட்டை கண்டுபிடித்தார்.உயரமான இடத்தில்
ஒரு கூடையை கட்டி குறிவைத்து பந்தை உள்ளே போட்டால் புள்ளிகள் வழங்கப்படும். இப்போது
இருக்கும் ஆடுகளத்தின் அளவில் பாதியளவே அப்போது அவர் உண்டாக்கிய ஆடுகளம் இருந்த்து
இருபுறமும் 10அடி உயரம் கொண்ட கம்புகளில் பழக்கூடைகள் கட்டப்பட்டன அதில் விளையாட அவர் கால்பந்தை
தேர்ந்தெடுத்தார் ஆட்டத்திற்க்கு 13 விதிகளை அவர் வகுத்தார். விளையாட ஆரம்பித்ததும்
அவருக்கு சிக்கல் உண்டானது கூடைகள் அடியில் மூடப்பட்டு இருந்ததால் ஒவ்வொருமுறையும்
பந்தை எடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
ஒவ்வொரு முறையும் நீண்ட குச்சி வைத்து
எடுக்க சிரமமாக இருந்ததால் கூடைகளின் அடிப்புறத்தை வெட்டி விட்டார்.
காலப்போக்கில் இவ்விளையாட்டு விதிகளில்
பலமாற்றங்கள் செய்யப்பட்டு இன்று உலகின் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றாக
திகழ்கின்றது.அமெரிக்க நாடுகளில் தொழில் முறை கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் கோடிகளில் புரளுகின்றனர்.
இந்த விளையாட்டு உலக அளவில் இவ்வளவு
புகழ்பெறும் என்பதை இதை கண்டுபிடித்த ஜேம்ஸ்மித்திடம் முன்னரே சொல்லியிருந்தால்
அவர் கட்டாயமாக நம்பியிருக்க மாட்டார். இவ்விளையாட்டை இவ்வளவு பிரபலமாக்கியதில்
அமெரிக்க YMCA பள்ளியின் பங்கு மிகவும்
மகத்தானது.1936-ம் ஆண்டு முதல் கூடைபந்தாட்டம் ஒலிம்பிக் போட்டிகளில்
சேர்த்துக்கொள்ளப்பட்டது.
Lucky Club: Online Casino and Slots
ReplyDeletePlay online casino games for real money at Lucky Club! Find over 225 games to choose from, luckyclub including popular slots, blackjack, roulette and more.