Wednesday, December 7, 2011

தன்னம்பிக்கை





உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில், 1964-ம் வருடம், சாம்பியன் லிஸ்டைன எதிர்த்து நின்ற 22 வயது கறுப்பு இளைஞன் முகமது அலியைப் பார்வையாளர்கள் பரிதாபமாகப் பார்த்தார்கள். போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சாதாரணமாகேவ நடந்தன. மூன்றாவது சுற்றில் முகமது அலியின் குத்து, லிஸ்டனின் புருவத்தைப் பதம் பார்த்தது. காயத்துக்கு மருந்து போட்டு வந்த லிஸ்டன் ஆக்ரோஷமாக குத்துக்களை விட்டார். அவரது புருவத்தில் இருந்த மருந்து தெறித்து, முகமது அலியின் கண்ணுக்குள் விழுந்துவிட, பெரும் உறுத்தலோடு அடுத்த இரண்டு சுற்று சண்டை போட்டார் அலி.

ஆறாவது சுற்றின்போது உறுத்தல் நீங்க, அதிரடி தாக்குதலில் இறங்கினார். அந்தச் சுற்று முடிந்த பின்புதான், தன் கைமூட்டு இடம் பெயர்ந்திருப்பது லிஸ்டனுக்குப் புரிந்தது. அவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போகவே முகமது அலி உலக சாம்பியன் ஆனார்.

நிருபர்கள், ‘‘இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’’ எனக் கேட்க, உற்சாகமாகப் பேசினார் அலி. ‘‘இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்னுடைய கோச் மிஸ்டர் ஃபிரட்ஸ் டோனர். அதனால், முதல் இடம் தவிர எதையும் எப்போதும் நான் ஏற்றுக் கொள்வதில்லை’’ என்றார் அலி தன்னம்பிக்கையுடன். ஆம், கலந்துகொண்ட போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்று, இறுதிவரை முதல்வனாகவே திகழ்ந்த முகமது அலிக்கு ஊக்கம் தந்த மந்திரச் சொல் அதுதான்.

nanri- ewow.lk

Tuesday, November 15, 2011

காலவரிசையில் தமிழினம்





கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித
இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில்
மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம்
சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம்.
4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய
நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப்
விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன்
கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன்.
குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன்.
இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர்.
அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய
மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட்
செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன்
ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம்.
முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி
சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய,
சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து
சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.


மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை
வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.



கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து
சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ
ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப்
பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து
வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன
கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி
மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில்
மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய
கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்)
என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி
எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை
உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன.
(சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி
அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள்
எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு,
புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு,
எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய
நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை,
சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும்,
முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம்,
நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும்
தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.
பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு
எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய
மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை
சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து,
ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன்,
பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும்
வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி
சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம்
சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின்
பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம்.
மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய
கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய
மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி
இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை
தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து
மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி.
நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது.
கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம்
இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன்
ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி,
ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18
சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய
குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ
தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார்
கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய்
இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார்,
மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன்,
நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன்,
பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன்
சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

 நன்றி - whistle blower 

Monday, September 12, 2011

துரித உணவகம்


கொஞ்ச நாளா பசங்க வெள்ளி,சனி ஆனா நைட்டு கிளம்பிடுறானுங்க எங்க
போறானுங்கன்னு தெரியல!

 இன்னடா விசயம்னு கேட்டா
 உன்ன மறந்துட்டேன்னு சொல்றானுங்க?!!

டேய் இவ்ளோ நாளா பழகிட்டு இப்படி பண்றீங்களே(இது நான்)

சரி இந்த வாரம் போலாம்டா  மச்சி

தேங்க்ஸ் மச்சி!! (இது நான்)

அடுத்த சனி இரவும் வந்தது

மச்சி நைட்டு ரெடியாயிடு,

சரிடா!!

சரி இவனுங்க எங்கதான் போரங்கதான்னு பார்ப்போமேன்னு புதுசா எடுத்த ஜீன்ஸ்,டிஷர்ட் போட்டு ரெடியானேன்.
.
ரெடி மச்சி கிளம்பலாமா?

இருடா மத்த முணு வரட்டும்.அனைவரும் வந்தனர். இருட்ட ஆரம்பித்தது ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டு பீச் பக்கம் இருக்குர பாஸ்ட் புட் சென்டர் (துரித உணவகம்) நோக்கி போனாங்க நானும் கூட............


என்ன மச்சி யாருக்காவது பிறந்த நாளா? டிரீட்லாம் தரீங்க?

இல்ல மச்சி சும்மாதான் இன்னா வேணுமோ வாங்கிக்க எல்லாமே நம்ம செலவுதான்..

சாயந்திரம் வேலையடுனதுல பயங்கர பசி மச்சி எனக்கு ஒரு சிக்கன் நூடுல்ஸ்
ஒரு 65  போதும்
எல்லோரும் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்தனர்

சும்மா சொல்லக்கூடாது வாசனைக்கு எத்த மாதிரி ருசியும் அருமையா இருந்தது.

நல்ல சாப்பாடு மச்சி.
அருமையா இருந்தது தேங்க்ஸ் டா.

பரவால்ல நமக்குள்ள தேங்க்ஸ் எதுக்குடா

ஐந்து பேரில் ஒவ்ஒருவராக கிளம்பினர் என்ன மச்சி கிளம்புரானுங்க?
போகட்டும் டா பணம் தரபோறது நான் தானே!!
கடைசியா இருந்தது நானும் அவனும் மட்டும் தான்.
திடிரென அவன்

மச்சி நீ நல்லா ஓடுவல்ல?
இன்னா மச்சி ஒரு புட் பால் ப்ளேயர பார்த்து இப்படி கேட்குற ஆனா இப்ப கொஞ்சம் கஷ்டம் நிறைய சாப்டேன்.

ஆனா ஓடித்தான் ஆகணும்

ஏன்டா?

நம்ம கிட்டதான் காசு இல்லையே!!

என்னடா சொல்ற காசு இல்லையா??

பிடிங்கடா அவனுங்களை என்று குரல் மட்டும் தான் கேட்டது எங்க பார்த்தோம் எடுத்த ஓட்டம் வீடு வரும் வரை திரும்பி கூட பார்க்கல


அப்பாடா வீடு வந்தாச்சு,

சாப்பாடு ஜீரணம் ஆகி அம்மா கிட்ட நல்லா திட்டு வாங்கிட்டு  மிண்டும் சாப்பிட்டு படுத்தேன்.
அப்பா இனிமே இவனுங்க சவகாசமே வேன்னம்னு ஒதுங்கியே இருந்தேன்

என்ன மச்சி ஆளையே காணோம்?
நைட் ரெடி ஆயிடு மார்க்கெட்ல ஒரு பாஸ்ட் புட்
கடை ஓபன் பண்ணியிருக்காங்கலாம்?

யப்பா!! ஆள விடுங்கடான்னு ஓடி வந்தேன்.
( இது நான் ஒன்பதாவது படிக்கும் போது நடந்தது)

Friday, August 26, 2011

அழுக்கு

ஒருநாள் காலை நண்பனை பார்த்து வர பூந்தமல்லி செல்ல வேண்டி இருந்தது காலையிலே சென்று வரலாம் என்று KMC சென்று அங்கிருந்து போகலாம் என்று மயிலாப்பூரிலிருந்து KMCல் நின்றேன்.பிராட்வே டு பூந்தமல்லி பேருந்து வந்தது. பேருந்தில் ஏறியதும் ஒரே புளிப்பு வாடை நேற்று செய்த சாம்பார் கெட்டு போனால் அடிக்குமே அதே வாடை.என்னவென்று பார்த்தால் கட்டிட வலை செய்யும் வட நாட்டவர் ஏறதாழ பேருந்து முழுவதும்.பெண்கள் முக்கை மூடிக்கொண்டும் ஆண்கள் திட்டி கொண்டும் பயணம் செய்தனர்.காலை பேருந்தில் மல்லியின்மணமோடு அழுக்கு மணமும் சேர்ந்து கலந்து புது வித குமட்டலை வழங்கியது. இறங்க மனது வராமல் தொடர்ந்து பயணமானேன்.

பக்கத்தில் நிற்பவர் தொடர்ந்து அவர்களை திட்டி கொண்டே வந்தார்.இவனுங்க ஊர்ல வேலையே கிடையாதா இங்க வந்து சாவடிக்குரனுங்க? (இப்பதிவு எழுதும் போது ஆவி யில் படித்தேன் அம்பத்தூர் தொழில் பேட்டையில் வேலை செய்பவர்களில் அதிகம் பேர் வடநாட்டவர் தான்.)வருடம் முழுவதும் வேலை,நிறைய வருமானம் தங்கும் இடம் இலவசம் போன்றவை இவர்களை சென்னை பக்கம் இழுக்கின்றது.

ஒரு பையனிடம் தம்பி வேலை முடிஞ்சதும் குளிக்கமாட்டியா? என்றேன். " மெட்ராஸ் தண்ணி நம்லுக்கு ஒத்துக்கலேனு முஞ்சில காரிய துப்பிட்டான்.எனக்கு போன் வந்தது பேசி முடித்தப்பிறகு
அவன் என்னிடம், பாய் இந்த போன் இன்னா ரேட்டுன்னு கேட்டான்.நான் 6000 ருபாய் என்றேன்.
என் தங்கைக்கு வாங்கணும் அவ இப்போ +2 போறான்னு சொன்னான்.அவன் தொடர்ச்சியாக என்னையும் போனையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.அவன் கண்களில் எதோ இனம் புரியாத
ஒரு சந்தோசம்.அது மகிழ்ச்சியா இல்ல சூழ்ச்சியான்னு தெரியல? பேருந்தில் மேலும் மேலும் கூட்டம் சேரவே நிற்க முடியாத நிலை.அவன் தொடர்ந்து என் கைபேசியை பார்த்துக்கொண்டே வந்தான் நன் பேன்ட் பாக்கெட்டில் வைக்காமல் கையிலே வைத்துக்கொண்டேன்.உண்மையா சொல்லணும்னா கொஞ்சம் பயமாத்தான் இருந்தது எங்கே போனை எடுத்துக்கொள்வனோ என்று.

முன் படிக்கட்டில் இருந்தவன் உரத்த குரலில் அரே பஸ் ஸ்டாப் ஆகையா என்றான்.கரையன்சாவடி நிறுத்தம்.அனைவரும் இறங்க ஆரம்பித்தனர் என் அருகே வந்தவன் சார் உங்க பர்ஸ் வெளியே வந்து கிழே விழுவது போல இருக்கு பத்திரம் என்றான். செருப்பால் அடித்தது போல இருந்தது.

அப்பா! பஸ்ல இருந்த நாத்தம் போய் விட்டது என்றார் ஒருவர்.
ஆம் நாத்தம் போய் விட்டது என்றேன் நானும்.

Monday, August 22, 2011

ஜானி

ஜானினா யாரோ ஹீரோன்னு நினைச்சிடதிங்க!!
எங்க ஏரியா கேப் மாரி,மொள்ள மாரி,முடிச்சவுக்கி எல்லாமே தலைவர் தான்.
ஆள் ஒல்லியான தேகம்,கருப்பு நிறம் ஆன முடி மட்டும் ரஜினி ஸ்டைலு அது சரியாய்
அமையலன்னு தலை முன்னாடி செவிங்கில்லாம் பண்ணிக்குவாறு.அடிதடில தல
கிங்கு ஆன ஆறாவது பசங்களுக்கு மேல தாண்ட மாட்டரு தாண்டினா பிளாஸ்திரி
நிச்சயம் யாருக்கு? நாம தலைக்கு தான்.ஆன வாய் செவிடால்ல ஒரு வடிவேலு சாரி
கவுண்டமணி.

எதாவது வீட்ல வளக்குற ஆட்ட காணோமா? எங்கடா ஜானின்னா ஆளே
இருக்க மாட்டான்.இரண்டு நாள் கழித்து வந்து ஊர்ல ஆயா செத்துட்டங்கன்னு அழுது
காட்டுவான்.

ஒரு முறை வீடு புகுந்து திருடிட்டு நல்லா
சாப்டிட்டு அங்கேயே தூங்கிட்டான்
காலையிலே கையும்,களவுமா மாட்டுனான். என்னடானு கேட்டா? மணி 2 தானே ஆகுது ஒரு
மணி நேரம் தூங்கிட்டு போலாம்னு பார்த்தா காலை ஏழு ஆயிடுச்சின்னு கேசுவலா சொன்னான்.

போலீஸ்ல மாட்டுனா அப்படியே அப்ருவர்தான் இந்த
அடிவாங்கறது எல்லாம்
தலைவருக்கு பிடிக்காது.தண்டனை முடிச்சிட்டு வந்த அன்னைக்கு தலைவர பார்க்கணுமே,
நெத்தியில விபுதி சகிதம் ஊரையே சுத்தி வருவாரு நம்ம அண்ணா ஹசாரே மாதிரி.

ஒரு நாள் எங்க வீடு கேபிள் வயர் அதிகமா
ஆடியது,அம்மா யாருடா அதுன்னு
குரல் கொடுத்தாங்க,பக்கத்துல இருக்குர லைட் கம்பத்துல தலைகிழாக தொங்கி கொண்டிருந்த
ஜானி, யம்மா கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ லைட்ட அவுத்துட்டு ஒயர பழசு போல கட்டிட்டு
போயடுறேன்னு சொன்னான்.அம்மாக்கு ஒரு நிமிஷம் பேச்சே வரல,அந்த அளவு தலைக்கு தில்லு.

ஏரியாவிலுள்ள சிறுவர் பூங்கா, டிரயினேஜ் மூடி, வீடு
கட்டினா அங்கே இருக்கும் கம்பி,
மணல்,செங்கல் அத விடுங்க ஏரியா ஹெட் கான்ஸ்டேபிள் சைக்கிள் உட்பட தலைவர்
கை வைக்காத எடமே கிடையாது.ஓடு பிரித்து திருடுவது நம்ம தலைவருக்கு
பிடித்த விளையாட்டு,மாட்டினா யக்கா! தப்பா எடுத்துக்காத நம்ம ஊடுன்னு
தெரியாது அண்ணாத்தய கேட்டுத்தா சொல்லுக்கான்னு கூலா சாரி கேட்பாரு நம்ம
வாத்தியாரு.!!

இப்போ நம்ம தலையோட நிலைமை என்னன்னு தெரியுமா?? ஒரு
பெட்டி கடை நடத்திக்கொண்டு இருக்கிறார் . ஒரு காலை காணோம் சுகரு வந்து
எடுத்திட்டாங்க, நான்லாம் தண்ணி ஊத்தி ஏரோ பிளேன் ஒட்றவண்டா???!!!!
என்று உதார் விட்டு கொண்டிருந்தான்.

Saturday, August 20, 2011

மனிதனா? உலோகமா?


ஒருமுறை ஷூட்டிங்கின் மதிய இடைவேளையில் M.Rராதாவுக்கு வீட்டில் சென்று சாப்பாடு
எடுத்து வர வேண்டிஇருந்தது ஆனால் வாகனம் ஏதும் இல்லை.சிவாஜி அப்போதுதான் இம்பாலா
கார் புதிதாக வாங்கியிருந்தார்.ராதா சாப்பாடு எடுத்து வருவதற்காக
சிவாஜியிடம் காரைக்கேட்டார்

'அண்ணே,அது இம்பாலாண்ணே! என்று சொல்லிவிட்டார் சிவாஜி.

அடுத்த முன்றே நாள்களில் புதிய இம்பாலா ஒன்றை வாங்கினார் ராதா. மதிய உணவு
இடைவேளையில் சிவாஜி இருக்கும் நேரம் பார்த்து இம்பாலா அங்கு வந்து
நின்றது. அதில் நிரம்ப
வைக்கோல் கட்டுகட்டாக ஏற்றப்பட்டிருந்தன.

'கணேசா, பார்த்தியா இம்பாலா??

என்ணணே,வைக்கோல் கட்டெல்லாம் ஏத்திகிட்டு? சிவாஜி கேட்டார்.

அது என்ன?வெறும் தகரம் தானே. தோட்டத்துக்கு வைக்கோல் ஏத்திகிட்டு போக எனக்கு வண்டி
கிடைக்கல சரி இம்பலாவுல ஏத்திக்கோப்பான்னு சொன்னேன் .
வைக்கோலை நாம வேற எதுல போட முடியும்?
இம்பாலாலதான் போட முடியும்.
நன்றி -திரு.முகில்,M.Rராதாயணம்.