மரத்தான் என்னும் நீண்ட ஓட்டபந்தையத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு
பெண்ணும் காத்தரின் சுவிட்சருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். சுவிட்சர் தனது 12
வயதில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் சீயர்லீடர் என்ற துறைக்கு செல்ல
பெரிதும் விரும்பினார்.விளையாட்டு வீராங்கனையாக மாறினால் நீ பெற விரும்பும்
அனைத்தையும் பெறமுடியும் என்ற தனது தந்தையின் கருத்தை உள்வாங்கி 1959ல் பள்ளி
ஹாக்கி அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.பயிற்சியை தவிர்த்து தினமும் 1மைல் தூரம்
ஓடினார்.அது அவரின் மனதிடத்தை அதிகப்படுத்தியது மேலும் படிப்படியாக ஓட்டம் அவரது ரகசிய
ஆயுதமாகவும் மாறியது.உயர்நிலை பள்ளியில் படித்தபோது நாளொன்றுக்கு 3மைல் தூரத்தை
தினமும் எளிதாக ஓடினார். அன்றைய காலத்தில் பெண்கள் இவ்வளவு தூரம் ஓடுவார்களா
என்பது கேள்விக்குறியே!!
வெர்ஜினியா பல்கலைகழகத்தில் ஹாக்கியோடு ஓட்ட்த்தையும்
தொடர்ந்தார்.ஒருநாள் ஆண்களின் ஓட்டப்பந்தைய பயிற்சியாளர் இவரை அணுகி மாகாண அளவில்
நடைபெறபோகும் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள தன்னுடைய குழுவில் ஓட விருப்பமா என்று
கேட்டார்.தன்னுடைய ஓட்ட திறமையை உலகுக்கு காட்ட வேண்டும் என்று
எதிர்பார்த்துக்கொண்டிருந்த காத்தரின் உடனே சம்மதித்தார்.(ஆண்களோடு பெண்கள்
போட்டியிடாத காலம் அது).
போட்டி தினத்தின் போது இவரே எதிர்பாரா வண்ணம் மீடியாவின் பார்வை முழுவதும்
இவர் மீது விழுந்திருந்தது. காமிராக்களின் மின்னல் மழையில் சற்று மிரண்டே விட்டார்
என்று கூட சொல்லலாம்.காரணம் காத்தரின் ஓடப்போவது ஆண்களுடன் அவர்களோடு போட்டியிட்ட
அவர் போட்டி தூரமான 1மைல் தொலைவை 5.58 வினாடிகளில் கடந்தார்.நாடே தன்னை போற்றும்
என்று எண்ணியவருக்கு கிடைத்த்து ஏமாற்றம் தான் பரிசாக வந்தது கொலை மிரட்டல்களும்
சாபங்களும் தான்.
விளையாட்டு உலகில் இருந்து சிலகாலம் ஒதுங்கியே இருந்த காத்தரின், ஸ்செராக்கியுசில் பத்திரிக்கையாளராக
பணியில் சேர்ந்தார்.ஆனாலும் நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் போட்டியில் எப்படியாவது
கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை அவர் தன்னுள்ளேயே கொண்டிருந்தார்.அங்கு நீண்ட ஓட்டம்
ஓடும் ஆண்களின் பயிற்சியாளர் ஆர்னியுடன் தன்னை குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு
கேட்டார்.இவர்கள் ஓடி பயிற்சி எடுப்பதே நீண்ட ஓட்டமான மாரத்தானில் கலந்து கொள்வதற்க்காக நீ வேண்டுமானால்
இங்கு பயிற்சி எடுத்துக்கொள் ஆனால் போட்டியிட முடியாது என திட்டவட்டமாக அறிவித்தார்.ஆனால்
சுவிட்சரின் மனதில் வேறு ஒரு திட்டம் இருந்தது எப்படியும் மாரத்தானில் கலந்து
கொள்ள வேண்டும் என்று!!
மாரத்தான் ஓட்டம் என்பது சராசரியாக 26.2மைல் தொலைவு வரை ஓட
வேண்டும்.காத்தரின் அப்போது 10மைல்கள் வரை ஓடும் திறம் பெற்றிருந்தார். 1966ல்
பாபி ரொபெர்டோ என்ற பெண் ஓட்ட எண் இல்லாமல் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார்
அது அங்கீகாரம் இல்லாமல் போனது அது போல இல்லாமல் அங்கீகாரம் பெற்று ஓட வேண்டும்
என் எண்ணி தனது பயிற்சியின் தூரத்தை 15,17.18 உயர்த்தி நாளொன்றுக்கு 26மைல்கள்
ஓடுமளவு முன்னேறினார்.கடும் குழப்பத்திற்கு பிறகு இவரின் ஓட்ட திறமையை கண்ட பயிற்சியாளர்
ஆர்னி போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் வழங்கினார்.நான் சம்மத்தித்தாலும் தேசிய அத்லெட்டிக்
கவுன்சில் (NCAA) உன்னை நிராகரிக்கும் பின்விளைவுகளை நீயே
பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.போட்டியை தவிர எதுவும் சுவிட்சரின் காதுக்கு
ஏறவில்லை.
சுவிட்சர் போட்டிக்காக விண்ணப்பித்தார் அவரின் விண்ணப்ப படிவம்
வந்தது.சரியான எண் பெறாமல் ஓடியதற்க்காக பாபி நிராகரிக்கப்பட்டது போல தானும்
நிராகரிக்கப்படக்கூடாது என்று விதிமுறைகளை படித்தார். மரத்தான் ஓட்டத்தில் ஆண்கள்
பெண்கள் என தனித்தனியாக விதிமுறைகள் ஏதும் காணப்படவில்லை.விண்ணப்பபடிவத்தில் தனது
பெயரை K.V.சுவிட்சர்
என்று நிரப்பினார்.
1967ம் ஆண்டுக்கான பாஸ்டன் மாரத்தான் போட்டி தொடங்கியது.பனிப்பொழிவுடன்
பலத்தகாற்று அவர்களை வரவேற்த்தது.கடினாமான துணிகளினால் அனைவரும் தன்னை
மறைத்திருந்தனர் அது சுவிட்சருக்கு சாதகமாய் போனது அவர் ஆண்களோடு ஆணாக கலந்திருந்தார்.அவளை
இனம் கண்ட ஆண் போட்டியாளர்களின் மனநிலை அவரை ஆதரிக்கும் வண்ணமே இருந்த்தது. ஒட்டம்
ஆரம்பித்தது 4 மைல்களை சுவிட்சர் கடந்த போது பத்திரிக்கையாளர்கள் இவரை அடையாளம்
கண்டு கொண்டனர்.ஆண்களோடு ஒரு பெண் ஓடுகிறாள் என கூக்குரலிட்டனர். பின் தொடர்ந்த
உதவி வாகனத்தில் இவரை சத்தம் போட்டு நிறுத்த சொன்னனர். மேலும் தொடர்ந்து ஓடினால்
கொன்றுவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.இனியும் தான் பெண் என்பதை சுவிட்சர்
மறைக்க விரும்ப வில்லை தனது முக்காடை திறந்து காற்றில் கூந்தலை பறக்க விட்டார்.பேருந்தில் இருந்து குதித்த ஜோக் என்னும் நபர் சுவிட்சரை தன் பலம் கொண்டு தடுத்தான்.
அவரின்
கூடவே ஓடிவந்த பயிற்சியாளர் ஆர்னி மற்றும் காதலர் டாமும், ஜோக்கை
சுவிட்சரிடமிருந்து பிரித்தனர். அவனை வெறித்த சுவிட்சர் அங்கேயே அவனை கொன்று
விடலாமா என்று எண்ணினார் அவரை பார்த்த பயிற்சியாளர் வேகமாக ஓடு பேய் போல ஓடு என
கட்டளையிட்டார்.சுவிட்சர் தனது ஓட்ட தூரத்தை 4:20:00 என்ற மணிக்கணக்கில்
முடித்தார்.இதுவும் தேசிய அத்லெட்டிக் கவுன்சிலால் அங்கீகரிகப்படவில்லை ஆனால்
இம்முறை பத்திரிக்கை துறையினர் இவரை உலகறிய வைத்துவிட்டனர்.
காத்தரின் சுவிட்சர் ஏற்படுத்திய தாக்கம் பெண்களை மாரத்தான்
போட்டியில் கலந்து கொள்ளுமாறு வைத்தது.ஆண்களை போல பெண்களாலும் நீண்ட தூரம் ஓட முடியும்
என்று 1972ம் ஆண்டு மாரத்தான் போட்டியில் பெண்களும் கலந்து கொள்ளலாம் என விதிகள்
தளர்த்தப்பட்டன.சர்ச்சையில் ஆரம்பித்து இன்று சாதனை நிகழ்த்திக்கொண்டுள்ளனர் அவரை
பின் தொடர்ந்த பெண்கள்!!.
.
நடந்த நிகழ்வை காத்தரின் கீழ்காணும் காணொளியில் விவரிக்கிறார்.
I would have finished that race on my
hands to prove that a women could do it. – Kathrine Switzer.
இளைப்பில்லை காணென்று கும்மியடி! - பாரதியார்..