1936ஆம்
ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் ஆட்டத்தின் போது ஜெர்மனியுடனான இவரின் ஆட்டத்தைக்கண்ட
ஹிட்லர் உடனே இவரை அழைத்து தம் தேசிய அணிக்கு விளையாடுமாறு கேட்கிறார் இப்போது இந்தியாவில்
வகிக்கும் ராணுவ பதவியை விட மேலான பதவியை தருவதாக வாக்களிக்கிறார் நம்மில் எத்தனை
பேர் அதை மறுத்திருப்போம் ஆனால் உடனடியாக தயான்சந்த் தன் தாய் நாட்டுக்கு
விளையாடுவது தனக்கு சிறப்பு என்று மறுத்துரைத்தார்.
இந்தியாவின்
தலைசிறந்த ஹாக்கி ஆட்டகாரர்களில் முதன்மையானவர் தயான்சந்த். இவர் உலகின் சிறந்த ஹாக்கி
வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
விளையாட்டை
உயிர் மூச்சாக நினைத்த தயான்சந்த் சிறுவயதில் விளையாட்டை
விரும்ப வில்லை.ஆனாலும்
மல்யுத்த போட்டிகளை பார்க்க ஆர்வம் காட்டினார்.
இவர்
தந்தையார் கோமேஸ்வர் தத் அடிப்படையில் ராணுவ அணியில் ஒரு ஹாக்கி வீரர் இவர்
பின்னாளில் இவ்விளையாட்டில் இவ்வளவு பெயர் பெற இது கூட ஒரு காரணமாகவும்
இருக்கலாம்.
தயான்சந்த்
ராணுவத்தில் முதலில் இவர் சேரும்போது ஹாக்கி விளையாட்டின் அடிப்படை கூட தெரிந்திருக்கவில்லை
அப்போது அவருக்கு 16 வயது.திடீரென ஹாக்கி விளையாட்டின் மீது அளவில்லா ஆர்வம்
தோன்றியது. வேலை நேரம் போக இரவு நேரங்களில் நிலவொளியில் தன் ஆட்ட பயிற்சியை
இடைவிடாது செய்வார்.
இவரை
சக ஆட்டகார்ர்கள் சந்த்(நிலவு) என்று அழைத்தனர். இதற்கு இரண்டு காரணம் தன் பெயரில்
நிலவு வருவதாலும் அல்லது நிலவொளியில் பயிற்சி மேற்க்கொண்டதாலும் இருக்கலாம்
என்கின்றனர்.
இவர்
மட்டையோடு பந்தை இயக்கும் விதம், எதிரணியினரிடம் ஏமாற்றி முன்னேறுதல், பந்துக்கட்டுப்பாடு
போன்றவற்றால் எதிரணி வீரர்களால் மந்திரவாதி (THE WIZARD) என அழைக்கப்பட்டார்.
1932ம்
ஆண்டு நடந்த ஓலிம்பிக் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிரான ஹாக்கிப்போட்டியில்
இந்தியா 24க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சாதனை இன்று வரை தகர்க்க முடியாத
சாதனையாக இருந்து வருகிறது. இப்போட்டியில் தயான் எட்டு கோல்களைப்போட்டார்.இந்த
வருடம் இந்தியா ஆடிய போட்டிகளில் மொத்தம் 338 கோல்களைப்போட்டது இதில் இவரது பங்கு
133 ஆகும்.
1935ஆம்
ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் பயணம் செய்து மொத்தம்
43 ஆட்டங்களை ஆடியது இதில் இந்தியா அடித்த கோல்களின் எண்ணிக்கை 584 இதில் தயான்
சந்த் அடித்தது மட்டும் 201 கோல்கள்.
உலக
அளவில் நடைபெற்ற ஆட்டங்களில் இவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 400 ஆகும்.
இவரது
வீரத்திற்க்கு உதாரணமாக விளங்கியது ஒரு நிகழ்வு பெர்லினில் நடைபெற்ற அப்போட்டியில்
இவரின் ஆட்டத்தை தடுக்கும் விதமாக ஜெர்மானிய வீரர் இவர் முகத்தில் கடுமையாக
தாக்கினார் தயானின் பல் உடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.சிகிச்சை
முடிந்த கையோடு வாயில் பஞ்சை திணித்துக்கொண்டு விளையாடினார் சந்த். இந்தியா 8க்கு
ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது இதில் இவரின் பங்கு 6 கோல்களாகும்.
தயான்சந்த்
ஒரு தன்னலமற்ற வீரர். கோல் அடிக்கும் வாய்ப்பை இவரின் சக வீரர்களுக்கும்
உண்டாக்குவார்.
இவரின்
ஆட்டத்திறன் மூலம் முறையே 1928,1932,1936 என்று வரிசையாக மூன்று ஒலிம்பிக்
போட்டிகளில் இந்திய அணிக்கு தங்க பதக்கம் பெற்று தந்துள்ளார்.
இவரது
மகன் அசோக்குமாரும் 1975ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி
அணிக்காக விளையாடினார்.
தனது
42வது வயது வரை தொடர்ந்து நாட்டுக்காக இவர் விளையாடினார் 1947-48ல் தனது ஆட்டத்தினை
நிறுத்திக்கொண்டார் அவ்வருடம் நடைபெற்ற 22 போட்டிகளில் தயான் அடித்த கோல்களின்
எண்ணிக்கை 61.
விளையாட்டு
ஒய்விற்கு பின் பஞ்சாபின் பாட்டியாலா நகரில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு
நிறுவனத்தில் பயிற்சியாளராக பணி அமர்த்தப்பட்டார் நல்ல விளையாட்டு வீரராக திகழ்ந்த
இவரால் நல்ல பயிற்சியாளராக ஜொலிக்க முடியவில்லை.
1956ல்
ஆண்டு இந்திய அரசு பத்மபூசண் விருது வழங்கி சிறப்பு செய்தது.
1979ஆம்
ஆண்டு தயான்சந்த் இயற்கை எய்தினார்.
1980ஆம்
ஆண்டு இந்திய அரசு இவரின் உருவ தபால் தலையை வெளியிட்டு சிறப்பு செய்தது.
தயான்சந்த்
தன் வாழ்நாள் முழுவதும் ஹாக்கி விளையாட்டிற்க்காக பல்வேறு பட்டங்களையும்
பதக்கங்களையும் பெற்று இருந்தாலும் வியன்னாவில் அவருக்கு வைக்கப்பட்டுள்ள சிலை
மகத்தானது அதில் இவர் நான்கு வீரர்களின் திறனுக்கு ஈடானவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
தயான்
சந்த் பிறந்த தினமான 29 ஆகஸ்ட் நாளை தேசிய விளையாட்டு தினமாக இந்திய அரசு
அறிவித்துள்ளது.
மிகவிரைவில்
பாரதரத்னா விருதையும் எதிர்பார்ப்போம்.
Thanks for the information my dear blood friend. very useful information. Melum nariya padika aarvama iruke...!!
ReplyDeleteDr. Dhyan Chand vilayadia world cup-1936 video link
ReplyDeletehttp://www.youtube.com/watch?feature=endscreen&v=4R3KHOrEn7A&NR=1
thala condippa ini niraya sports updates irukkum
ReplyDelete